2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

புத்தர் சிலை உடைப்பு: வழக்கு விசாரணை ஆரம்பம்

Editorial   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இம்மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது.

 கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்திலேயே இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி ஜகத் ஏ கஹந்தகமகே (தலைவர்) தலைமையில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜயகீ டி அல்விஸ் மற்றும் இந்திக காலிங்கவங்ச ஆகியோர், ஏனைய நீதிபதிகளாவர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 16 பேரில், 14 பேர் மட்டுமே அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏனைய இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

வழக்கு விசாரணைக்குப் பின்னர், அனைவரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .