2021 ஒக்டோபர் 27, புதன்கிழமை

வட்டவளையில் இரண்டு சடலங்கள் மீட்பு

Editorial   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை, லொனெக் தோட்ட பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த இருவருமே இவ்வாறு இன்றுக்காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

முதலாவது சடலம் காலை 6.10க்கும் இரண்டாவது சடலம் 7 மணிக்கும் மீட்கப்பட்டுள்ளது.

இருவரில் ஒருவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் வட்டவளை லொனெக் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

சிலாபம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கதக்க சஜிந்த தில்சான் என்பவரும் லொனெக் தோட்டத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்க தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான சின்னையா ராஜா என்பவருமே இவ்வாறு   சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .