R.Maheshwary / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
அவிசாவளை- நாபாவல, தைகல பிரதேசத்தில் கணவனைக் கொலை செய்த மனைவியை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு, அவிசாவளை நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று (19) உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாதம் 18ஆம் திகதி இரவு தனது கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்த பெண்ணொருவர், நேற்று (19) காலை அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அத்துடன், தினமும் மதுபோதையில் வரும் தனது கணவன் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் அன்றைய தினமும் கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பொல்லால் பலமாக கணவனின் தலையில் தாக்கியதால், கணவன் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து. நேற்று (19) அவிசாவளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
39 minute ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
30 Oct 2025
30 Oct 2025