2022 மே 18, புதன்கிழமை

ஐக்கிய காங்கிரஸின் 17ஆவது மாநாடு

Editorial   / 2022 ஜனவரி 11 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 17ஆவது வருடாந்த மாநாடு, எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை கல்முனையில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்த தேசிய மாநாட்டுக்கு நாட்டின் பிரதான மாவட்டங்களில் இருந்து கட்சியின் பேராளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையுடன் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டுக்கு, அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பது 2005ஆம் ஆண்டு முதல் உலமா கட்சி என்ற பெயரில் இயங்கி வந்ததுடன், கடந்த வருடம் ஐக்கிய காங்கிரஸ் கட்சி என பெயர் மாற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .