2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

கோழிச் சண்டையில் விந்தகத்துக்கு காயம்

Editorial   / 2023 மே 02 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கோழி தொடர்பிலான வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ஒருவர் மற்றொருவரின் அந்தரங்க பிரதேசத்தை கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

 

இந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

மடுல்சீம- பிட்டமாருவ கிராமத்தில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, ஒருவரின் விந்தகத்தை வெட்டும் அளவுக்குச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம், நேற்று முன்தினம் (13) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வாய்த்தர்க்கம் நீண்டு, ஒருவர் மற்றையவரின் விந்தகத்தை வெட்டும் முயற்சிக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபருக்கு மற்றைய நபர் இரண்டு கோழிகளை வளர்ப்பதற்கு கொடுத்துள்ளதுடன் அதில் ஒரு கோழி ​காணாமல் போனமையால் இப்பிரச்சனை ஏற்பட்டதாக காயமடைந்தவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த 41 வயதானவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ​மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைதுசெய்வற்கான விசாரணைகளை மடுல்சீம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். ( பாலித ஆரியவன்ஸ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .