Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Freelancer / 2023 மே 03 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்றைய தினம் ( 03 ) தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
கடந்த வாரம் தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சி ,வண்டு மற்றும் எலிகளின் கழிவுகள் காணப்பட்டமையைக் கண்டித்தும்
300 கிலோ கோதுமை மா தொழிலாளர்களுக்கு வழங்காமல் களஞ்சியசாலையில் வைத்திருந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ”தோட்ட நிர்வாகம், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காது கொழுந்து பறிப்பதில் மாத்திரம் தொழிலார்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், இங்கு பறிக்கப்படும் கொழுந்துகளை் வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப் படுவதாகவும், தமக்கு இதுவரை சுகாதார வசதி மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும்,
அத்தோடு தோட்ட அதிகாரி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்குவதில்லை எனவும் தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
அத்துடன் இது குறித்து தோட்ட அதிகாரியிடம் மக்கள் கலந்துரையாடிய போதிலும் அவர் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை எனக்கூறிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
2 hours ago