Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 26 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
”மனைவியை விட்டு காதலியுடன் தான் வாழ்வேன்” என அடம் பிடித்த இளைஞர் ஒருவர், பொலிஸ் நிலையத்தை விட்டுத் தப்பிச் சென்று உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரசூல். இவரது மனைவியின் பெயர் ஹாய்ஸ்ஷா பானு. இவர்களுக்குத் திருமணமாகி 8 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், ரசூல் கடந்த ஒருவருட காலமாக வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இது குறித்து பல முறை எச்சரித்தும், கெஞ்சியும் அடங்காத கணவன் ரசூல் மீது மனைவி ஹாய்ஸ்ஷாபானு அரூர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் ரசூலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த பொலிஸார் குறித்த ரகசிய காதலியுடனான தொடர்பைத் துண்டிக்குமாறு கூறியுள்ளனர்.
இதனால் ஆவேசமான ரசூல், ”நான் காதலியுடன் தான் வாழ்வேன், அவள் இல்லையென்றால் இறந்துவிடுவேன்” என்று கூறிவிட்டு, பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பியோடி வீதியில், எதிரே வரும் வாகனங்களில் மோதி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.
எனினும் அதிஷ்ட வசமாக அவர் உயிர்பிழைத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அவருக்கு தர்ம அடிகொடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
30 minute ago
32 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
43 minute ago
51 minute ago