2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் சிறந்த விளைச்சல்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள ஒலுவில் கிராமத்தில் சேதனப் பசளை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கை மூலம் சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் இத்திட்டம் இப்பிரதேசத்தில் வெற்றியளித்துள்ளதாகவும் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் சேதனப் பசளை உற்பத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, ஒலுவில் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி உதவி பெற்று வரும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உதவி மூலம் சேதனப் பசளை உற்பத்திக்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுகின்றன.

சூழலில் காணப்படும் தாவரங்களின் பாகங்கள், பறவை மற்றும் விலங்குக் கழிவுகள், குப்பை கூழங்கள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சேதனப் பசளை மூலம் செய்கை பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச் செய்கையால் கூடிய விளைச்சல் கிடைத்துள்ளதாக இப்பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்ட சேதனப் பசளை கொண்டு இம்முறை பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் என்றுமில்லாதவாறு கூடிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அறுவடை கிட்டியதாகவும், நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொண்டமை மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியினைத் தருவதாகவும் விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X