2022 ஓகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை

கைகளை கட்டிக்கொண்டு நீந்தும் 70 வயது பாட்டி

Editorial   / 2022 ஜூன் 28 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


சாதனைக்கு வயது தடையில்லை என்பது போல 70 வயது மூதாட்டி ஒருவர் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டியபடி நீச்சலடித்து அசத்தியுள்ளார்.

கேரள மாநிலம் ஆலுவாவில், வீ.கே. குன்னம் புரத்தை சேர்ந்தவர் ஆரிபா. நீச்சல் மீது அதிக ஆர்வமுள்ள இவர், முறையாக நீச்சல் பயின்றுள்ளார்.

கைகளை கயிறால் கட்டியபடி நீச்சல் பயிற்சி பெற்றுவந்த ஆரிபா, அதனை பொதுமக்கள் முன்னிலையில் செய்துகாட்டியுள்ளார். அதன்படி ஆலுவாவில் உள்ள பெரியாறு ஆற்றில் கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு 780 மீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளார்.

இவருடன் 11 வயது சிறுவனும், 38 வயது பெண்ணும் கலந்துகொண்டனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .