2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

விசேட அதிரடிப் படையினருக்கு ’சுவ தாரணி’

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எல்.எம்.ஷினாஸ்

கொரோனா தொற்றை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் ஆயுர்வேத வைத்தியசாலைகள் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேலை திட்டத்தின் ஒரு கட்டமாக, நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் பாரம்பரிய ஆயுர்வேத முறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் 'சுவ தாரணி' ஆயுர்வேத பானம், விசேட அதிரடிப் படையினருக்கு நேற்று  (13) இலவசமாக வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இணைப்பாளரும், சிறுவர் மற்றும் இளைஞர்களை பாதுகாக்கும் சமூக ஸ்தாபனத்தின் தலைவருமான பி. சர்மில் ஜஹான் தலைமையில், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாமில் இந்தப் பானம் வழங்கப்பட்டது.

நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.ஏ.நபீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, ஒரு தொகுதி மருந்துகளை விசேட அதிரடிப்படை பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.பி.பி.எம்.டயஸிடம் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட வைத்தியசாலையின் டொக்டர். ஏ.சி.டில்சாத், மருதமுனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான டொக்டர் எம்.என்.எம்.முஸ்தாக், டொக்டர் திருமதி எஸ்.எச்.எப்.றிஸ்வானா ஆகியோரும் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .