2022 ஜனவரி 22, சனிக்கிழமை

ஓட்டோ விபத்து ஒருவர் மரணம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 25 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

டிக்கோயா மணிக்கவத்தை பகுதியில் ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மணிக்கவத்தையை சேர்ந்த 62 வயதுடைய கே.சுந்தர்ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹட்டனிலிருந்து டிக்கோயா மணிக்கவத்தை பகுதிக்கு சென்ற ஓட்டோ நேற்று மாலை 6.45 மணியளவில் வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. 

ஓட்டோவில் சாரதி உட்பட நால்வர் பயணித்துள்ள நிலையில், ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துள்ளர்.

 

ஏனைய மூவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X