2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

முதலை தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு நட்டஈடு

Editorial   / 2022 ஜனவரி 11 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  மண்டானைப் பகுதியில் இம்மாதம் 1ஆம் திகதி முதலை தாக்கி பலியான திருக்கோவில் 04  குடிநிலத்தைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்த்தி என்பவரின்  குடும்பத்துக்கு நட்டஈடு வழங்கப்பட்டது.

பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் வழிகாட்டலில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் ஆரம்ப கட்ட மரணச் செலவுத் தொகையாக விலங்குத் தாக்குதல் நட்டஈடு கொடுப்பனவு, அவரது மனைவியிடம் நேற்று (10) வழங்கப்பட்டது.

திருக்கோவில்  பிரதேச செயலக கிராம சேவையாளர், நிர்வாக உத்தியோத்தர் எஸ்.கந்தசாமி, அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் த.தனராஜன், பகுதி கிராம உத்தியோகத்தர் சு.பார்த்தீபன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.முரளி  ஆகியோர் இணைந்து இவ் அனர்த்த நிவாரண நட்டஈடு நிதியை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .