Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மாகாண சபைத் தேர்தல்களுக்கு கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது. அது ஜனநாயக செயற்பாடுகளில் அடிப்படையை மீறுவதாகும் என முன்னாள் மத்திய மாகாண சபைத் தலைவர், துரை மதியுக ராஜா தெரிவித்தார்.
இன்று (19) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
மாகாண சபைப் பொறிமுறையில் இன்று மக்கள் பிரதி நிதித்துவம் முடக்கப்பட்டுள்ளமை பாரிய கவலையளிப்பதாக உள்ளது
மத்திய மாகாண சபை கலைக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. அதே போல் கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைக்ககப்பட்டு ஆறு வருடங்கள் ஆகின்றன. சிறுபான்மை மக்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு பொறிமுறையாக மாகாண சபைகள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும் இன்று நடைமுறையில் அது இல்லை. எனவே தமது பிரதிநிதிகளை இழந்த நிலையில், மக்கள் காணப்படுகின்றனர்.
சகல அதிகாரங்களும் ஆளுநர் கையிலும் செயலாளர்கள் கையிலும் தங்கி உள்ளது. தட்டிக்கேட்க அல்லது கோரிக்கைகளை முன்வைக்க மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் அநீதிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்நிலையானது மலையக மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு பாரிய இழப்பாகக் கருதமுடியும்.
இதுகாலவரை மாகாண சபைகள் விகிதாசார தேர்தல் முறையிலே நடந்ததன. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தம் காரணமாக உள்ளூராட்சித் தேர்தல்களுக்கு கலப்பு முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. எப்படிப்பார்த்தாலும் பரந்து விரிந்து வாழும் சிறுபான்மையினருக்கு விகிதாசார முறையே பொருத்தமாகும் என்றார்.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago