Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 04 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில், உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான காளிக்குட்டி கணேசன் கடந்த வியாழக்கிழமை (2) மாலை காணாமல் போயிருந்த நிலையில், பொது மைதானத்தில் சடலமாக காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸ் குழுவினர் சென்று விசாரணை மேற்கொண்டு தடயப்பொருட்களை ஆய்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து அலறி விதைகள் மீட்கப்பட்டிருந்தன.
சம்பவ இடத்தில் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago