2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

திகன கலவரம்: அமித்தின் காரியாலத்தில் தீ

Editorial   / 2023 மார்ச் 20 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டி பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட தென்னக்கும்புர பிரதேசத்தில் உள்ள சமூக சேவைகள் நிலையத்தில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஒருதொகை உபகரணங்கள் தீயில் கருகி நாசமடைந்துள்ளன.

இந்த நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள “மஹாசோஹொன் படை” என்ற அமைப்பின் ஸ்தாபகர் என்று அறியப்பட்ட அமித் வீரசிங்ஹவால் இந்த அலுவலகம் நிர்வகிக்கப்பட்டுவந்துள்ளது.

இன்று (20) அதிகாலை ஏற்பட்ட தீயினால், பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் யாவும் அவை நாசமாகியுள்ளன. அவை, பாடசாலை மாணவர்களுக்கு இன்று (20) விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .