2023 ஜூன் 07, புதன்கிழமை

பழைய மாணவர் சங்கம் உதயமானது

Freelancer   / 2023 மார்ச் 28 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் இரண்டைச் சேர்ந்த சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழையமாணவ சங்கத்தின்  அங்குரார்ப்பணம் கூட்டமும் , சங்க உருவாக்கமும் அதிபரின் ஆலோசனைக்கமைய நாடு தழுவிய ரீதியில் பழையமாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு   நடத்தப்பட்டது.

இதன்போது தலைவராக அதிபர் V. தினகரன்,உப தலைவராக ஜெகநாதன்,செயலாளராக திருமதி சுதாஜினி ,உப செயலாளராக சதீஷ்,பொருளாளராக லோரன்ஸ் இவர்களுடன் இணைந்து செயல்பட இன்னும் 12 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இக்குழுவின் ஊடாக எதிர்காலத்தில் பழைய மாணவர்களை  ஒன்றிணைத்தல்,பாடசாலையில் உள்ள சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தல், மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரித்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .