2021 ஒக்டோபர் 27, புதன்கிழமை

பாலியல் தொழிலுக்கு மனைவியை அழைத்த கணவன்

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவர் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து கட்டாயப்படுத்துகிறார் என்று இளம்பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 27 வயது ஐஸ்வர்யா.. தமிழகத்தை சேர்ந்தவர்.. அப்பா, அம்மாவை இழந்தவர்.. அதனால், சிறுவயதிலேயே இவரை தத்து கொடுத்துவிட்டனர்.. அந்த வளர்ப்பு தந்தையும் இறந்துவிட்டார்..

இறுதியில் தன் திறமையால் படித்து, சிங்கப்பூரில் வேலை பார்த்தார். இவர் ஒரு டான்ஸ் டீச்சர்.. சிறுவர்களுக்கு சிங்கப்பூரிலேயே நடன பயிற்சி தந்துவந்தார். அங்கு அருண் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் முறைப்படி திருமணமும் செய்துகொண்டனர்.

குடும்ப பிரச்சினைக்காரணமாக தனிக்குடித்தனமும் சென்றுவிட்டார். இந்நிலையில், “பாலியல் தொழிலுக்கு வா” என்று மனைவியை அழைத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், தன்னுடைய நண்பர்களிடம் விபசாரம் செய்ய கட்டாயப்படுத்தி உள்ளதாகவும், பாலியல் தொழிலுக்காக நண்பர்களிடம் மனைவியை விற்கவும் அருண் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

கல்யாணம் ஆனதில் இருந்தே, தினமும் தூக்க மாத்திரைகளை தெரியாமல் தந்து, அப்போதிருந்தே இப்படி நிர்வாணமாக வீடியோவையும் எடுத்து வைத்துள்ளது தெரியவந்தது. இதனால் நிலைகுலைந்த ஐஸ்வர்யா, அங்கிருக்கும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிங்கப்பூரில் இருந்து தப்பி கடலூர் வந்து முறையிட்டுள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .