Editorial / 2021 ஜூன் 19 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவு, மளிகை,பேக்கரி உள்ளிட்ட பொருட்களை பொதி செய்யும் போது, உறைகளைக் கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதிப் பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகையால், அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசியச் செயல்பாடுகளுக்குத் தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளில் ஒன்றாக அனைத்து உணவகங்களிலும் (Restaurants / Hotels / Mess) பார்சல் சேவை (Take away Service) வழங்க அனுமதிக்கப்பட்டது.
உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகைக் கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில், அந்தக் கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
உறைகளை எடுக்கும்போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு அந்த உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதால் இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் எனக் கருதப்படுகிறது.

4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025