2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

R.Maheshwary   / 2021 ஜூலை 21 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தோட்ட வீடமைப்பு  மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,  தலவாக்கலை கொரின் தோட்டத்தில் 20 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சக்திவேல் நாட்டினார்.

இந்நிகழ்வில், கொட்டக்கலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொரின் வட்டார அமைப்பாளர் பிலிப், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் கிஷோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .