R.Maheshwary / 2021 நவம்பர் 28 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
மடுல்சீமை- மஹதோவ லோவர் டிவிஷன் பகுதியில் மரண வீட்டுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர், வீதியில் தடுக்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பசறை 13 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த க. லட்சுமி என்ற 76 வயதுடைய பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் மடூல்சீமை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், 1990 அம்பியுலன்ஸ் மூலம், சடலத்தை பசறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .