2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

கம்பி காட்டிய கைதி சிக்கினார்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

ஹிங்குருகடுவ- பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் (30) சிறைக்கூண்டின் கம்பியை
கழற்றி தப்பிச் சென்ற நிலையில் நேற்று (1) காலை
கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக பண்டாரவளை , பதுளை, வெளிமடை
நீதவான நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த
நிலைலேயே, ஹிங்குருகடுவ பொலிஸாரினால் 31 வயதான சந்தேகநபர்
கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், சிறையிலிருந்து தப்பிச் சென்றிருந்த இவரை தேடும்
பணிகயைத் தீவிரப்படுத்திய பொலிஸார் வராதொலை பகுதியில் உள்ள
வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபரை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்
படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X