R.Maheshwary / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
பயிற்சிக்காக வருகைத் தந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், வெல்லவாய இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) மாலை அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 53ஆவது படையணியின் 6ஆவது பாபல ரெஜிமென்ட்டின் மிஹிந்தலை முகாமில் கடமையாற்றிய 49 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, 2 மாதங்களுக்கு முன்னர், தமிழ் மொழி மூலப் பயிற்சிக்காக வெல்லவாய- வருணகம இராணுவ முகாமுக்கு வருகைத் தந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (16) இரவு நித்திரைக்குச் சென்ற மேஜர், நேற்று மாலை வரை அறையிலிருந்து வெளியே வராமையால், அவர் தங்கியிருந்த அறை திறந்து பார்க்கப்பட்டுள்ளது.
இதன்போது கட்டிலுக்கு அருகில் விழுந்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் இடம்பெறும் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
5 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
24 Oct 2025