Freelancer / 2022 ஜூலை 07 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். ஆதரவு திரட்டுவதற்காக, இரு தினங்களுக்கு முன்னர், அவர் சென்னைக்கு வந்தார்.
கிண்டியில் உள்ள, ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, விஜய் வசந்த் சட்டை பையில் இருந்த, 1.50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 'மான்ட்பிளாங்க்' பேனா திருட்டுப்போய் விட்டது. இந்தப் பேனாவை, மறைந்த தந்தையும், தொழில் அதிபருமான வசந்தகுமாரின் நினைவாக, விஜய் வசந்த் பயன்படுத்தி வந்துள்ளர். இந்தப் பேனா முனை, தங்கத்தால் செய்யப்பட்டது. அதில், வைரமும் உள்ளது.
விலை உயர்ந்த பேனா திருட்டு போனது குறித்து, விஜய் வசந்த் சார்பில், கிண்டி பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான பொலிஸார், பேனாவை திருடியவரை தேடி வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago