Princiya Dixci / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.எம். எம். ஏ. காதர்
கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பீ.எம். ஷிபான் பதவி விலக மறுப்பதை அடுத்து, பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள ஏ.எச்.ஏ. ழாஹிர், கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான உறுப்பினர் தெரிவுத் தேர்தலின்போது, கல்முனை மாநகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தெரிவு மூலம் ஓர் ஆசனத்தையும் பட்டியல் உறுப்பினர்கள் 4 பேரையும் பெற்றுக்கொண்டதை தாங்கள் அறிவீர்கள்.
“இதன்படி, மருதமுனை பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 4 வட்டாரங்களில் போட்டியிட்ட நால்வருக்கும் தலா ஒவ்வொரு வருடம் பட்டியல் ஆசனத்தை வழங்குவது என கட்சியின் தலைமையுடன் உயர் பீடமும் தீர்மானித்தது.
“அதற்கு அமைவாக முதல் வருடம் ஏ. நெய்னா முஹம்மது, இரண்டாம் வருடம் வை.கே. றஹ்மான் ஆகியோரும் தங்கள் பதவிகளை நிறைவு செய்தனர்.
“அதன் பின்னர் பதியேற்ற ஆசிரியர் பீ.எம். ஷிபானின் ஒரு வருட பதவிக்காலம் 2021 ஏப்ரல் மாதம் இறுதி அமர்வுடன் முடிவுற்றது.
“இது தொடர்பாக தங்கள் பதவியை இராஜினாமா செய்யுமாறு தாங்கள் பீ.எம். ஷிபானுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தும் இதுவரை பதவியை இராஜினாமா செய்யாது, ஏமாற்றி வருகின்றார். இது எனக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.
“எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. அதேபோன்று கட்சியின் தலைமையும் உயர்பீடமும் எடுத்த முடிவை நிராகரிக்க முடியாது.
“எனவே, உறுப்பினர் ஷிபான் தனது பதவியை இராஜினாமா செய்து, நான் பதவி ஏற்பதற்கு செயலாளர் நாயகம் என்ற வகையில் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
38 minute ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
26 Oct 2025