2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

தேயிலை துறையில் வீழ்ச்சி

Sudharshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

ஒருகிலோ கிராம் பச்சை தேயிலை கொழுந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட 80 ரூபாய் நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரமானியமும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடானது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையென பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும்  நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன் பில நேற்று(23) தெரிவித்தார்.

பிவிதுறு ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை தேயிலை கொழுந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாயும்  உரமானியமும் இந்த அரசாங்கத்தில் இல்லை.இதனால் தேயிலை உற்பத்தி துறையானது வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .