2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

சாமிமலையில் தீ விபத்து : 22 வீடுகள் முற்றாக சேதம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க்ரோ தோட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தீவிபத்தில் இந்தத்தோட்டத்தின் இரண்டாமிலக்க லயன் குடியிருப்பு முற்றாக எரிந்து சாம்பராகியதில் 22 வீடுகள் எறிந்து முற்றாக சேதமடைந்துள்ளன. இதில் 32 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாத போதும் குடியிருப்பாளர்களின் உடைமைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இத் தீவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இத் தீவிபத்துத் தொடர்பாக இலங்கை மின்சார சபையினரும் மஸ்கெலியா பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தோட்டத்தின் சனசமூக நிலையத்திலும் ஏனைய இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு அம்பகமுவ பிரதேச சபைத்தலைவர் வி.தினேஸ்,  பிரதேச சபை உறுப்பினர் சிவசுந்தரம் ஆகியோர் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

 


  Comments - 0

  • Ravichandran . M Wednesday, 06 April 2011 05:47 PM

    இப்படியான சூழ்நிலைகளில் அனைத்திலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உணவு, உடைகள்இசிகிச்சை மற்றும் மூன்று மாதத்திற்க்கான பண உதவி செய்து உதவலாம்.இவைகள் தேவையான காரியங்கள் அல்லவா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .