2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

100 ‘கால்’ களுடன் பயணித்தவர் கைது

Editorial   / 2021 ஜூன் 13 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள மதுபானசாலை ஒன்றிலிருந்து  மதுபான போத்தல்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், நேற்று சனிக்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் காலத்தில், கூடிய விலையில் விற்பனை செய்வதற்காக, மோட்டர் சைக்கிளில்  மது பானங்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்றிரவு மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் கூளாவடி பிரதேசத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த இளைஞனை பொலிஸார் வழிமறித்தே கால்(1/4) போத்தல் மதுபான போத்தல்கள் 100 யையும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதில், கைது செய்யப்பட்டவர் கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞன் எனவும், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .