2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

2 பெண் கன்றுகளை ஈன்ற பசு

Editorial   / 2021 ஜூலை 21 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பத்தூர் : 

திருப்பத்தூர் மாவட்டம், செலந்தம்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் சின்னத்தம்பி, விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் சினையாக இருந்த ஒரு பசு நேற்று 2 பெண் கன்றுகளை ஈன்றது. இதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து  காக்கணாம்பாளையத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர், அன்புசெல்வம் கூறுகையில், ‘வழக்கமாக பசுக்கள் ஒரு குட்டி மட்டுமே போடும்.

இதில் அரிய நிகழ்வாக சில பசுக்கள் 2 கன்றுகளை ஈன்றும்போது, ஒன்று ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் இருக்கும். ஆனால், இரண்டுமே பெண் கன்றுகளாக ஈன்றிருப்பது மிகவும் ஆச்சரியம்’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .