2021 ஜூலை 28, புதன்கிழமை

நுவரெலியாவில் பெண் சாரணர் ஆசிரியைகளுக்கான வதிவிட பயிற்சி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சும் நுவரெலியா மாவட்ட சாரணர் சங்கமும் இணைந்து பெண் சாரணர் ஆசிரியைகளுக்கான மூன்று நாள் வதிவிடப்பயிற்சி செயலமர்வொன்று நாளை 19ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஹட்டன் சீடா வளநிலையத்தில் இடம் பெறவுள்ளது.

இந்தச்செயலமர்வில் நுவரெலியா மாவட்டத்தைச்சேர்ந்த 60 பெண்சாரணர் ஆசிரியைகளுக்கு முதன் முறையாக தமிழ் மொழி மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவி ஆணையாளர் ஏ.கே.மகேந்திரன் தெரிவித்தார்.

இலங்கையில் சாரணர் செயற்பாடுகள் வியாபித்துள்ள போதும் மலையகத்தமிழ் பாடசாலைகளில் ஒரு சில பாடசாலைகளிலேயே சாரணர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெண்சாரணர் குழுக்களுக்காக பயிற்சி வழங்கும் வகையில் பெண்சாரணர் ஆசிரியர்களுக்கு இதுரை காலமும் தமிழ் மொழி மூலம் பயிற்சிகள் வழங்கப்படவில்லை.

இதனைக் கருத்திற்கொண்டு பெண் சாரணர் ஆசிரியைகளுக்கான தமிழ் மொழி மூலம் பயிற்சிகள்  நுவரெலியா மாவட்டத்தில் முதன் முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .