Kogilavani / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சற்று முன் இந்த அறைக்குள் என் கண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. அவ்விதமே என் மூச்சுகளும் தவிப்பும் வீணாகியபடியே இருக்கின்றன. எந்த ஆறுதலுமற்ற இந்த நாட்களையும் இனி வரப்போகின்ற நாட்களையும் நான் விழுங்கி ஜீரணித்துக் கொள்வேனா? முடிவு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல எந்தக் கேள்விக்கும் என்னிடம் இப்போது பதிலில்லை. எனக்குத் தெரிந்திருக்கும் எல்லாப் பதில்களும் கடைசியில் என்னைக் கவிழ்த்துவிட்டிருக்கின்றன. ஏமாற்றியிருக்கின்றன. வாழ்வு என்னை வீணாக்கியதா? வாழ்வை நான் வீணாக்குகின்றேனா? அதற்கும் எனக்கு பதில் சொல்லத் தெரியாது! என்னைப் பொறுத்தவரை எல்லா உறவுகளுமே ஏதோ ஒரு நேரத்தில் பொய்த்துவிடுகிற ஒன்றுதான். அப்படி பொய்த்துவிடுகிற எதுதான் சாசுவதம்? அல்லது பொய்த்துவிடுகின்ற உறவுதான் சாசுவதமானதோ என்னவோ? உறவுகளின் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்க முடியாத சூழ்நிலை வருமாயின், வீணாகிக் கொண்டிருப்பதென்றால் என்ன என்பதை முழுக்க தெரிந்து கொள்ள முடியும் ஒவ்வொருவராலும்.4 hours ago
4 hours ago
4 hours ago
Ranja Monday, 14 May 2012 11:17 AM
தனிமையின் கொடுமையை, ஒரு துணையின் பிரிவை அமையாய் கூறியிருக்கின்றீர்கள். அருமை.
Reply : 0 0
ரோஷான் ஏ.ஜிப்ரி. Wednesday, 27 June 2012 08:21 PM
மனசின் கடைசி சுவரையும் வார்த்தை கொன்டு வருடி விட
அனாரினால் மட்டும் அடிக்கடி முடியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago