Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
ஏ - 9 வீதியின் அக்குறணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 37 சிற்றுண்டிச்சாலைகளுக்கு மலசலகூடங்கள் இல்லையென ஆய்வு ஒன்றில் தெறியவந்துள்ளதாக அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான் கூறினார்.
நேற்று இடம் பெற்ற அக்குறணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்திலேயை இவர் இவ்வாறு தெரிவித்தார். அக்குறணையிலிருந்து அலவத்துகொடை வரை செல்லும் ஏ - 9 வீதியில் சுகாதார அதிகாரிகள் அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றின் போது இத்தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சிற்றுண்டிச்சாலைகளுக்கு தனித்தனியே மலசல கூடங்கள் அமைப்பது கடினமாக இருப்பதால் கூட்டு மலசல கூடங்கள் அமைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். மலசலகூடங்கள் அமைக்க தவறும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக சட்ட நடடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.
37 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago