2022 ஓகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை

50 சதவீத பஸ்கள் சேவையிலிருந்து நிறுத்தம்

R.Maheshwary   / 2022 ஜூன் 27 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

டயர், பெட்டரிகள் இன்மை காரணமாக, பதுளையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் டிப்போவில் 50 சதவீதமான பஸ்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட பஸ்கள் பதுளை டிப்போ வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த 50 சதவீதமான பஸ்களுள் பெரும்பாலானவை கொழும்பு, நீர்கொழும்பு,கற்பிட்டி, அளுத்கம, காலி, யாழ்ப்பாணம், கண்டி, அம்பாறை, மட்டகளப்பு ஆகிய தூர இடங்களுக்கான பஸ்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பதுளை டிப்போவின் உதவி முகாமையாளர் சீ.பீ. ராஜபக்ஸ, ஏனைய டிப்போக்கள் போலவே பதுளை டிப்போவின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது.

அன்றாடம் இந்த பஸ் டிப்போவிலிருந்து 117 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற நிலையில், இன்று 50 சதவீதமான பஸ்களே சேவையில் ஈடுபடுவதாகவும் நாளுக்கு நாள் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கான பிரதான காரணம் டயர் மற்றும் பெட்டரி இன்மையே என தெரிவித்த அவர், முன்பு அம்பாறை டயர் தொழிற்சாலையிலிருந்து இ.போ.சவுக்கு தேவையான டயர்கள் பெற்றுக்கொள்ளப்பட்டாலும் தற்போது அங்கிருந்து பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேப்போல் இந்த பஸ்களின் திருத்த பணிகளுக்காக பிரதேச மட்டங்களில் காணப்பட்ட மத்திய நிலையங்களும் பல வருடங்களாக மூடப்பட்டுள்ளன.

எனவே இவ்வாறு பஸ்கள் சேவையில் ஈடுபடாமையால் மாதாந்த பருவக்கால சீட்டுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பிரச்சினையாகியுள்ளது.

எனவே பஸ்களை விரைவில் சேவையில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .