2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

500 மதுபான கடைகளை மூட நடவடிக்கை

Ilango Bharathy   / 2023 மே 15 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

500 மதுபான கடைகளை மூட தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 தமிழ்நாட்டில் 5,329 மதுபானக்கடைகள் உள்ளன. இக் கடைகள் மூலம்  இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 44,000  கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகின்றது.

எனினும் மாநிலம் முழுவதும் 500 மதுபான கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இந்த  அறிவிப்பை செயற்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீற்றர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி 500 கடைகளை ஜூன் 3ஆம் திகதி  முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .