2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக்கு சவாலளிக்குமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 28 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது இன்று காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் படுதோல்வியடைந்து உலகக் கிண்ணத்துக்கான நேரடி வாய்ப்பை இழந்த இலங்கை, நியூசிலாந்துக்கு சவாலளிப்பதற்கு பலத்தளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக துடுப்பாட்டத்தில் இலங்கையணி வீரர்கள் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ள நிலையில், கடந்த போட்டியில் விளையாடிய அணிக்கு மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்குமெனத் தெரிகிறது.

பந்துவீச்சுப் பக்கமாக டில்ஷான் மதுஷங்கவுக்குப் பதிலாக மதீஷ பத்திரண அல்லது பிரமோத் மதுஷன் ஆகியோர் விளையாடக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுபக்கமாக பின் அலென், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்குக்குச் செல்கையில், இவர்களை மார்க் சப்மன், டொம் பிளன்டல் ஆகியோர் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .