2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

சிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் முன்னிலையில் பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 08 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு எதிரான ஒற்றை டெஸ்டில், நேற்றைய முதல் நாள் முடிவில் முன்னிலையில் பங்களாதேஷ் காணப்படுகின்றது.

ஹராரேயில் இடம்பெறும் குறித்த டெஸ்டில் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் மொமினுல் ஹக், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே பிளஸிங்க் முஸர்பனியிடம் சைஃப் ஹஸன், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோவைப் பறிகொடுத்தது.

பின்னர் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் ஷட்மன் இஸ்லாமை றிச்சர்ட் நகரவாவிடம் பறிகொடுத்த பங்களாதேஷ் சிறிது நேரத்தின் பின்னர் முஷ்பிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹஸனை முஸர்பனி, விக்டர் நயுச்சியிடம் பறிகொடுத்து தடுமாறியது.

இதையடுத்து 70 ஓட்டங்களைப் பெற்ற மொமினுல் ஹக்கும் நயுச்சியிடம் வீழ்ந்த நிலையில், லிட்டன் தாஸ், மகமதுல்லாவின் இணைப்பில் இனிங்ஸை பங்களாதேஷ் கட்டியெழுப்பியது.

இந்நிலையில், 95 ஓட்டங்களுடன் தாஸும், தொடர்ந்து வந்த மெஹிடி ஹஸன் மிராஸும் டொனால்ட் ட்ரிபானோவிடம் வீழ்ந்த நிலையில், முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களை தமது முதல் நாளில் பங்களாதேஷ் பெற்றுள்ளது.

தற்போது களத்தில் மகமதுல்லா 54, தஸ்கின் அஹ்மட் 13 ஓட்டங்களுடனுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .