2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 11 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, லோர்ட்ஸில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மழை காரணமாக 47 ஓவர்கள் கொண்டதாகவே இப்போட்டி இடம்பெற்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

இங்கிலாந்து: 247/10 (45.2 ஓவ. ) (பில் சோல்ட் 60 (54), ஜேம்ஸ் வின்ஸ் 56 (52), லூயிஸ் கிரேகரி 40 (47), பிறைடன் கார்ஸே 31 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 5/51, ஹரிஸ் றாஃப் 2/54, செளட் ஷகீல் 1/14, ஷடாப் கான் 1/46, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/37)

பாகிஸ்தான்: 195/10 (41 ஓவ. ) (துடுப்பாட்டம்: செளட் ஷகீல் 56 (77), ஹஸன் அலி 31 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: லூயிஸ் கிரேகரி 3/44, சஃஹிப் மஹ்மூட் 2/21, கிரேய்க் ஒவெர்ட்டன் 2/39, மற் பார்க்கின்ஸன் 2/42, பிறைடன் கார்ஸே 1/44)

போட்டியின் நாயகன்: லூயிஸ் கிரேகரி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .