2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

இலங்கையணியின் பயிற்றுவிப்பாளராக மஹாநாம?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 12 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆர்தரைப் பிரதியீடு செய்வதற்காக, இலங்கையணியின் முன்னாள் தலைவர் ரொஷான் மஹாநாம கருத்திற் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்தரின் இரண்டாண்டு பதவிக் காலமானது இவ்வாண்டு டிசெம்பர் மாதத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 19 வயதுக்குட்பட்டோர் அணியுடன் ஆலோசகராகப் பணியாற்றுவதற்காக இலங்கையணியின் இன்னொரு முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கருத்திற் கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 19 வயதுக்குட்ப்பட்டோர் அணியின் அல்லது ஏ அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இலங்கையணியின் முன்னாள் வீரரான அவிஷ்க குணவர்தன கருத்திற் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .