2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்தை சுருட்டிய மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 24 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்படோஸில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவுகளின் அணித்தலைவர் கெரான் பொலார்ட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், கிறிஸ் ஜோர்டான் 28 (23), அடில் ரஷீட் 22 (18), ஒய்ன் மோர்கன் 17 (29), ஜேம்ஸ் வின்ஸ் 14 (12) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 3.4-1-7-4, ஷெல்டன் கோட்ரல் 4-1-30-2, அகீல் ஹொஸைன் 4-0-16-1, பேபியன் அலென் 2-0-10-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 104 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மே. தீவுகள், பிரண்டன் கிங்கின் ஆட்டமிழக்காத 52 (49), நிக்கலஸ் பூரானின் 27 (29), ஷே ஹோப்பின் 20 (25) ஓட்டங்களோடு 17.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், லியாம் டோஸன் 4-0-12-0, அடில் ரஷீட் 4-0-21-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக ஜேஸன் ஹோல்டர் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .