Shanmugan Murugavel / 2021 ஜூலை 06 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் ஆறாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், ஏழாம் நிலை வீரரான அன்ட்ரே ருப்லெவ், றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட் மற்றும் ஒன்பதாம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் கனடாவின் பீலிக்ஸ் அகர் அலியாஸ்ஸிமேயிடம் 4-6, 6-7 (6-8), 6-3, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து ஜேர்மனியின் ஸவ்ரேவ் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 3-6, 6-4, 6-4, 0-6, 3-6 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்டன் புக்ஸோவிக்ஸிடம் தோற்று ரஷ்யாவின் ருப்லெவ் வெளியேறியிருந்தார்.
இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் கனடாவின் டெனிஸ் ஷபொவலோவ்வை எதிர்கொண்ட ஸ்பெய்னின் அகட், 1-6, 3-6, 5-7 என்ற நேர் செட்களில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், துனீஷியாவின் ஒன்ஸ் ஜபெயுரை எதிர்கொண்ட போலந்தின் ஸ்வியாடெக், 7-5, 1-6, 1-6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.
50 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago