2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்கா எதிர் நெதர்லாந்து: இன்று முதலாவது போட்டி

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 31 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, பெனோயில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கு இவ்விரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில், இத்தொடர் முக்கியத்துவம் பெறுகின்றது.

நெதர்லாந்தின் அணித்தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ், கொலின் அக்கர்மன், டொம் கூப்பர், பஸ் டி லீட், டெஜா நிடமனுரு, மக்ஸ் ஓ டெளட் ஆகியோர் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதிலேயே தொடரின் போக்கு அமையும்.

போல் வான் மீக்கரன், றொலெஃப் வான் டர் மேர்வே, பிரட் கிளாசென், விவியன் கிங்மா, பிரண்டன் குளோவர் என சவாலளிக்கக்கூடிய பந்துவீச்சாளர்களையும் நெதர்லாந்து கொண்டிருக்கிறது.

முழுப்பலத்துடன் களமிறங்கும் தென்னாபிரிக்கா பெரும்பாலும் இலகுவாக இத்தொடரைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .