2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

கோப்பா அமெரிக்கா: இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 07 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் நடைபெற்றுவரும் கோப்பா அமெரிக்கா தொடரில் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.

இன்று காலை நடைபெற்ற கொலம்பியாவுடனான அரையிறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றிருந்தது.

போட்டியின் வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டி முடிவடைந்திருந்தது. ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லொட்டரோ மார்ட்டின்ஸ் பெற்றதோடு, கொலம்பியா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் டயஸ் பெற்றிருந்தார்.

ஆர்ஜென்டீனாவின் றொட்றிகோ டீ போல், கோல் கம்பத்துக்கு மேலால் பெனால்டி உதையைச் செலுத்தியிருந்த நிலையில், டேவின்ஸன் சஞ்சேஸ், யெரி மினா, எட்வின் கர்டோனா ஆகியோரின் பெனால்டிகளை ஆர்ஜென்டீனாவின் கோல் காப்பாளர் எமிலியானோ மார்டின்ஸ் தடுத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .