Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே காலியில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராடுகின்றன.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் குறித்த போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்களைப் பெற்றவாறு தமது முதலாவது இனிங்ஸில் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட், என்குருமாஹ் பொன்னரின் இணைப்பாட்டத்தின் மூலம் இனிங்ஸை நகர்த்தியது.
பின்னர் ரமேஷ் மென்டிஸிடன் 35 ஓட்டங்களுடன் பொன்னர் வீழ்ந்ததோடு, குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் 72 ஓட்டங்களுடன் பிறத்வெய்ட்டும் லசித் எம்புல்தெனியவிடம் வீழ்ந்தார். பின்னர் றொஸ்டன் சேஸ், ஷே ஹோப், ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் சிறிது இடைவெளிகளில் மென்டிஸிடம் வீழ்ந்தனர். அடுத்து வந்த கேமார் றோச்சும் சிறிது நேரத்திலேயே பிரவீன் ஜெயவிக்கிரமவிடம் வீழ்ந்தார்.
கைல் மேயர்ஸ், வீராசாமி பெருமாள் ஆகியோர் இனிங்ஸை நகர்த்திய நிலையில், எம்புல்தெனியவிடம் பெருமாள் வீழ்ந்ததுடன், ஜோமெல் வொரிக்கானும் உடனேயே மென்டிஸிடம் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 253 ஓட்டங்களையே மேற்கிந்தியத் தீவுகள் பெற்றது. மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களுடன் காணப்பட்டார்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, ஒஷாத பெர்ணான்டோவை ரண் அவுட் மூலம் இழந்து இன்றைய மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் பதும் நிஸங்க 21, சரித் அஸலங்க நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
37 minute ago
51 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
51 minute ago
55 minute ago