2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

பதவி விலக முடியாது: பிளட்டர்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரான செப் பிளட்டருக்கு எதிராக, குற்றவியல் விசாரணைகளை சுவிட்ஸர்லாந்து ஆரம்பித்துள்ள போதிலும், பதவி விலக முடியாது என, அவர் அறிவித்துள்ளார்.

பீபாவுக்கு பிரதிகூலமான ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும் ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சங்கத்தின்(யு.ஈ.எப்.ஏ) தலைவர் மைக்கல் பிளாட்டினிக்கு நாணயமற்றரீதியில் பணத்தை வழங்கினார் எனவும் பிளட்டர் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பிளட்டினிக்கு பிளட்டர், 2011ஆம் ஆண்டு செலுத்திய 1.5 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் தொடர்பாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், எந்தவிதத் தவறையும் தான் மேற்கொள்ளவில்லை எனவும் பொருத்தமான பணமே வழங்கப்பட்டுள்ளதாகவும் பிளட்டர் தெரிவிக்கின்றார்.

1999ஆம் ஆம் ஆண்டுக்கும் 2002ஆம் ஆண்டுக்குமிடையில் தனது ஆலோசராகப் பணியாற்றியமைக்கான ஊதியமே அதுவென, பிளட்டர் தெரிவிக்கிறார்.

மறுபுறத்தில், பீபாவுக்கும் அதன் முன்னாள் உப தலைவரான ஜக் வோணருக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பிலும் அவர் விசாரணைகளை எதிர்கொள்கின்றார்.

பீபா மீது மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகளையடுத்து, பெப்ரவரி 2016ஆம் ஆண்டுடன் பதவி விலகுவதாக பிளட்டர் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அதற்கு முன்பு பதவி விலகுவதற்கே அவர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .