2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

மே. தீவுகள் எதிர் அவுஸ்திரேலியா: தொடர் ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 08 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, சென். லூசியாவில் இலங்கை நேரப்படி நாளை மறுதினம் அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், இரண்டு அணிகளும் வெவ்வேறு நோக்கங்களுடன் இத்தொடரில் களம் புகுகின்றன.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் கெரான் பொலார்ட், கிறிஸ் கெய்ல், அன்ட்ரே ரஸல், டுவைன் பிராவோ என அனைத்து நட்சத்திர வீரர்களும் தற்போது அணியில் காணப்படுகின்றபோதும், தொடர்சியான, ஒன்றுபட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்த தடுமாறி வருகிறது.

தவிர, ஷிம்ரோன் ஹெட்மயர், நிக்கலஸ் பூரான் போன்ற இளம்வீரர்களின் பங்களிப்பும் பெரிதாக இல்லாத நிலையில் விரைவாக இவற்றிலிருந்து மீண்டு உலகக் கிண்ணத்துக்கு தயாராக வேண்டிய நிலைமை மேற்கிந்தியத் தீவுகளுக்கு காணப்படுகிறது.

மறுபக்கமாக அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில், பற் கமின்ஸ், டேவிட் வோணர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்ட முதற் தெரிவு வீரர்கள் இல்லாத நிலையில், உலகக் கிண்ணக் குழாமில் தமதிடங்களை உறுதிப்படுத்த டான் கிறிஸ்டியன், மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், மிற்செல் மார்ஷ், றிலே மெரெடித், ஜொஷ் பிலிப், அஸ்தன் தேணர், அன்றூ டை, மத்தியூ வேட், மிற்செல் ஸ்வப்ஸன், ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், வெஸ் அகர் ஆகியோருக்கு இது சிறந்த வாய்ப்பாகக் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .