2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: சென்னையை வென்ற டெல்லி

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சென்னை, கட்டுக்கோப்பாக பந்துவீசிய அக்ஸர் பட்டேல் (2), அன்றிச் நொர்ட்ஜே (1), இரவிச்சந்திரன் அஷ்வின் (1), ஆவேஷ் கான் (1), ககிஸோ றபாடாவிடம்  விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. அம்பாதி ராயுடு மாத்திரம் தனித்துப் போராடி ஆட்டமிழக்காமல் 55 (43) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பதிலுக்கு, 137 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, தீபக் சஹர் (1), ஜொஷ் ஹேசில் வூட் (1), ஷர்துல் தாக்கூர் (2), இரவீந்திர ஜடேஜாவிடம் (2) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும், ஷீகர் தவானின் 39 (35), ஷிம்ரோன் ஹெட்மயரின் ஆட்டமிழக்காத 28 (18) ஓட்டங்களோடு 19.4 ஓவர்களில்  7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக  அக்ஸர் பட்டேல் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .