2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

ஐ.அ. அமீரகத்தில் செப்டெம்பர் – ஒக்டோபரில் மிகுதி ஐ.பி.எல்?

Shanmugan Murugavel   / 2021 மே 25 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இரண்டாவது பாதியை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வாண்டு செப்டெம்பர் 18ஆம் திகதிக்கும், ஒக்டோபர் 12ஆம் திகதிக்குமிடையிலான காலப் பகுதியில் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆராய்கிறது.

இது நடைபெறுவதற்கு பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் போட்டி அட்டவணைகள் மாற்றப்பட வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பகுதியில் ஐ.பி.எல் நடைபெற்றால், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பாகுமெனக் குறிப்பிடப்படுவதற்கு ஒரு வாரம் முன்பாகவே ஐ.பி.எல் முடிவடையுமென்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .