2021 ஜூலை 28, புதன்கிழமை

கால்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கூடாக பந்தை அடித்த ரோஜர் பெடரர்

Super User   / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.

உலகத் தரவரிசையில் இரண்டாவது நிலை வீரரான பெடரர், இத்தொடரின் மூன்றாவது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் பிரையன் டாபுலை 6-1, 6-4, 6-2 விகிதத்தில் தோற்கடித்தார்.

இப்போட்டியின் போது பெடரர் ஒரு தடவை பந்தை தனது கால்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கூடாக அடித்து பார்வையாளர்களை வியக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் அமெரிக்க பகிரங்கத் தொடரின் அரையிறுதிப்போட்டியொன்றிலும் முக்கிய கட்டத்தில் பந்தை கால்களுக்கிடைப்பட்ட பகுதிக்கூடாக ரோஜர் பெடரர் அடித்தனுப்பியமை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து பெடரர் கருத்துத் தெரிவிக்கையில், 'கடந்த தடவை அரையிறுதிப் போட்டியின்போது அது நடந்தது. அத்துடன் 0-30 புள்ளிகளிலிருந்து 0-40 புள்ளிகளை நோக்கிச் செல்லும்போது இடம்பெற்றது. எனவே  அது சற்று முக்கியத்துவம் வாய்ந்தது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .