2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

வௌ்ளவத்தையில் எரிந்து கருகிய பென்ஸ்

Editorial   / 2021 ஜூலை 27 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை மாயா மாவத்தையில் பயணித்துக்கொண்டிருந்த நவீனரக பென்ஸ் காரொன்று எரிந்து கருகியுள்ளது என வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

​காருக்குள் புகை கிளம்புவதை அவதானித்த சாரதியான அந்த வாகனத்தின் உரிமையாளர், காரை நிறுத்திவிட்டு புகைத்தொடர்பில் பரிசோதித்துள்ளார். எனினும், கார் தீப்பற்றி எரிவதை அவரால் தடுக்கமுடியவில்லை.

எனினும், திம்பிரிகஸ்யாக பிரதேசத்திலுள்ள தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார். அங்கிருந்த வந்த ஒன்பது பேரடங்கிய தீயணைப்பு பிரிவினர், தீயைக் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவந்தனர். இதேவேளை, கார் தீப்பற்றி எரிந்தமையால் எவ்விதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை.

அந்த வாகனத்தின் உரிமையாளர் கொழும்பு 8 பாடசாலை மாவத்தையைச் சேர்ந்தவர் ஆவார் எனத் தெரிவித்த வெள்ளவத்தைப் பொலிஸார், மின்சார கோளாறு காரணமாகவே கார் தீப்பற்றி எரிந்துள்ளது என்பதும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X