Editorial / 2022 ஜூன் 29 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

மருந்துப்பொருட்களுக்கான வேண்டுகோளுக்கு பிரதிபலிக்கும் முகமாக, மலேசியாவில் உள்ள பல பௌத்த மற்றும் மத அமைப்புக்கள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கின.
சி ஹூய் டாங் - கோலாலம்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கரீன் கியோங் அம்மணி, மலேசியாவின் யயாசன் சின் செவ் மற்றும் பெஸ்ட் விஷ்ஸ் அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருமதி. சிவ் நியோக் செவ் மற்றும் ப்லியா மற்றும் போ குவாங் ஷான் மலேசியாவின் தலைமை மடாதிபதியான வென் ஜூ செங்க் ஆகியோர் இணைந்து கையளித்துள்ளனர்.
54 ஆயிரத்து 046.26 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரிடம் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சுமங்கல டயஸிடம் 2022 ஜூன் 14ஆந் திகதி சான்சரி வளாகத்தில் வைத்து கையளித்தார்.
இந்த சரக்கு 2022 ஜூன் 20ஆந் திகதி கோலாலம்பூரில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால் அனுப்பப்பட்டது.
கையளிக்கும் நிகழ்வில் பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி. டிலானி வீரகோன் மற்றும் இரண்டாம் செயலாளர் (வர்த்தகம்) செல்வி. மேகலா அபேகோன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
29 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
41 minute ago