Editorial / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கந்தப்பளையில் இயங்கும் நிவ் "டைனிங் டொட்ஸ்" ஆரம்ப பாடசாலையில் பயிலும் சிறார்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு சர்மிளா வரவேற்பு மண்டபத்தில் அதிபர் திரேஸா நெட்டோ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.
கந்தப்பளை,இராகலை, ஹைபோரஸ்ட் பிரதேச ஆரம்ப பாடசாலைகளின் சிறார்கள் இதில் கலந்து கொண்டதுடன் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், அதிதிகளான கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன்,மத குருக்களும் கலந்து கொண்டு சிறார்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து கௌரவித்தனர். ஆ.ரமேஸ்.






அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .